டெக்

செவ்வாய் கிரகத்தின் புதிய படங்கள் - நாசா வெளியீடு

webteam

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாயின் மலை முகட்டிலிருந்து செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்து அனுப்பியுள்ளது.

மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் வாழ வைப்பது சாத்தியமா என்ற ஆய்விற்காக நாசா விஞ்ஞானிகள் அதிநவீன கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுப்பினர். இதற்காக இந்த விண்கலத்தில் மனிதர்களைப் போலவே, கண்கள், கால்கள், மூளை செயல்பாடுகளை புரியும் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு அனுப்பப்பட்டது. கடந்த 3 மாதங்களாக இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் பல அரிய புகைப்படங்களை அனுப்பி விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தற்போது செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளால் ஆன மலை முகட்டிலிருந்து செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்து அனுப்பியுள்ளது. கியூரியாசிட்டியில் பொருத்தப்பட்டுள்ள லென்ஸ் இமேஜர் கேமராவில் இந்த புகைப்படங்கள் துல்லியமாக பதிவாகியுள்ளன. மேலும் அந்த பாறையை துளையிட்டு மண் மாதிரிகளையும் படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதுவரை கியூரியாசிட்டி அனுப்பிய 57 புகைப்படங்களை ஒன்றாக தொகுத்து நாசா வெளியிட்டுள்ளது.