டெக்

ஆப்பிள் இயங்குதளத்தைப் பாதிக்கும் புதிய மால்வேர்கள்... ஆய்வாளர்கள் எச்சரிக்கை

ஆப்பிள் இயங்குதளத்தைப் பாதிக்கும் புதிய மால்வேர்கள்... ஆய்வாளர்கள் எச்சரிக்கை

webteam

ஆப்பிளின் மேக் ஓஎஸ் இயங்குதளத்தைப் பாதிக்கும் புதிய மால்வேர்களை இணைய பாதுகாப்பு வழங்கும் போர்டிநெட் (Fortinet) நிறுவனம் கண்டறிந்துள்ளது.

ஆப்பிளின் மேக் ஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் கணினிகளைக் குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த மால்வேர்கள், சமீபத்தில் உலகையே அச்சுறுத்திய வான்ன க்ரை மால்வேர்களை விட பலமடங்கு வலிமையானவை என்று கூறப்பட்டுள்ளது. வான்ன க்ரை மால்வேர்களைப் போலவே பயனாளர்களின் தகவல்களை முடக்கி, அதனைத் திரும்பப் பெற பணம் வசூலிக்கும் முறையிலேயே இந்த மால்வேர்களின் செயல்பாடுகளும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போர்டிநெட்டின் பிளாக்கில் பல்வேறு தகவல்கள் வெளியிட்டுள்ளன. மேக் ஓஎஸ் இயங்குதளங்களைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மால்வேர்களை உருவாக்கியவர்கள் யாஹூ மற்றும் ஃபேஸ்புக்கில் பணிபுரியும் பொறியாளர்களே என்று அந்த நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. சாஃப்ட்வேர் துறையில் கைதேர்ந்தவர்களான அந்த பொறியாளர்கள் உருவாக்கியுள்ள புதிய மால்வேர்களின் 4 விதமான குணாதிசயங்களை போர்டிநெட் ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர். 

* ஆப்பிள் கணினி பயன்பாட்டாளர்கள் இந்த மால்வேர்களை எளிதில் கண்டறியமுடியாது.

* ஒருமுறை இந்த மால்வேர் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டு விட்டால், அதனைக் கண்டறிவது மிகவும் கடினமான ஒன்று. இன்ஸ்டால் செய்யப்பட்ட பின்னர் அந்த கணினியுடன் இணைக்கப்படும் எல்லா டிவைஸ்களிலும் அந்த மால்வேர் தானாகவே இயங்கத் தொடங்கிவிடும்.

* தற்போது வரை நடைமுறையிலுள்ள 128 பிட் என்க்ரிப்ஷன் (encryption) தரத்திலான பாதுகாப்பு அம்சங்கள் மூலம் புதிய மால்வேர்களை உங்கள் கணினியில் இருந்து அகற்ற முடியாது. இதனால் வேறுவழியின்றி உங்கள் ஃபைல்களை டிக்ரிப்ஷன் (decryption) செய்வதற்காக புதிய சாஃப்ட்வேரினை விலை கொடுத்து வாங்க வேண்டி வரும். 

* பெரிய அளவிலான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாத வீடுகளில் பயன்படுத்தப்படும் கணினிகளை, ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில்  இந்த மால்வேரால் என்க்ரிப்ஷன் செய்ய முடியும்.