டெக்

வியாழன் கோளில் வளையங்கள், அரோராக்கள்! ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட புதிய படங்கள்!

வியாழன் கோளில் வளையங்கள், அரோராக்கள்! ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட புதிய படங்கள்!

ச. முத்துகிருஷ்ணன்

சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட வளையங்கள், அரோராக்களுடன் இருக்கும் வியாழன் கோளின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

நாசாவின் சக்திவாய்ந்த புதிய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி வியாழன் கோளின் புதிய புகைப்படங்களை எடுத்துள்ளது. ஜூலை 27 அன்று எடுக்கப்பட்ட இந்த படங்களின் குறிப்பிட்ட அம்சங்களை தனித்து நிற்கும் வகையில் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி நாசா வெளியிட்டுள்ளது. இந்த புதிய புகைப்படங்களில் புவியின் வட, தென் துருவங்களில் ஏற்படும் ஒரு அரிய நிகழ்வான “அரோரா” வியாழனிலும் நிகழ்வது படம்பிடிக்கப்பட்டுள்ளது.

“வியாழன் பற்றிய விவரங்களை அதன் வளையங்கள், சிறிய செயற்கைக்கோள்கள், அரோராக்கள் மற்றும் விண்மீன் திரள்களை இப்படத்தில் காணலாம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. நேர்மையாகச் சொல்வதானால், இது இவ்வளவு நன்றாக இருக்கும் என்று நாங்கள் உண்மையில் எதிர்பார்க்கவில்லை” என்று பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான இம்கே டி பேட்டர் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.