டெக்

இனி தொந்தரவு இல்லை - விரைவில் வருகிறது வாட்ஸ் அப் செயலியில் புதிய வசதி!  

இனி தொந்தரவு இல்லை - விரைவில் வருகிறது வாட்ஸ் அப் செயலியில் புதிய வசதி!  

EllusamyKarthik

இணைய வாசிகள் தவிர்க்க முடியாத அப்ளிகேஷன் என்றால் அது வாட்ஸ் அப் தான். நண்பர்கள், உறவுகள், அலுவலக தொடர்புகள், தொழில் வாய்ப்புகள் என அனைத்திற்கும் எல்லோருமே வாட்ஸ் அப் பயன்படுத்த வேண்டி உள்ளது. 

இதில் குழுவாகவும், தனி நபராகவும் சேட் செய்யும் வசதி உள்ளது. இருந்தாலும் சமயங்களில் வேண்டாத ஃபார்வேர்ட் மெசேஜ்களை தனியாகவும், குழுவிலும் தட்டிவிட்டு இம்சை கொடுக்கும் இம்சை அரசர்களும் வாட்ஸ் அப்பில் நிறைந்திருப்பார்கள். அவர்களது இம்சையிலிருந்து தப்பிக்க வாட்ஸ் அப்பில் ‘மியூட்’ செய்யும்  வசதி உள்ளது. இருந்தாலும் அது எட்டு மணி நேரம் முதல் அதிகபட்சம் ஒரு வருடம் வரை தான் பலன் கொடுக்கும். 

இந்த சூழலில் வாட்ஸ் அப் நிறுவனம் அதற்கு தீர்வு கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது வாட்ஸ் அப் பீட்டா இன்போ. 

அடுத்து வரும் நாட்களில் எந்நேரமும் மெசேஜ் செய்து இம்சிக்கும் நபர் உள்ள குழுவையோ அல்லது தனி நபரின் எண்ணையோ எல்லா நேரமும் மியூட் மோடில் முடக்கி வைப்பதற்கான வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வரவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்காகவே ‘ALWAYS’ மியூட் என்ற ஆப்ஷனை கொண்டு வர வாட்ஸ் அப் முயற்சித்து வருகிறதாம். சோதனைகளுக்கு பிறகு விரைவில் இது நமது செயலில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.