விண்கல் பென்னு PT
டெக்

பென்னு விண்கல் மாதிரியுடன் பூமியை நோக்கி வரும் ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம்! செப். 24ம் தேதி திக்.. திக்!

இச்சோதனைக்காக 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நாசா ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி விண்கல்லை கண்காணிக்கத் தொடங்கியது.

Jayashree A

விண்வெளி ஆராய்சியாளர்கள் தொடர்ந்து விண்வெளியை ஆய்வு செய்து பல ஆராய்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பூமிக்கு மிக அருகில் விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதை தெரிந்துக்கொண்ட நாசா விஞ்ஞானிகள், அந்த விண்கல்லை ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பினர். அவர்கள் எதிர்பார்த்தப்படி அந்த விண்கலமானது விண்கல்லிருந்து சில பகுதிகளை மாதிரி எடுத்துக்கொண்டு பூமிக்கு வர இருக்கிறது.

இச்சோதனைக்காக 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நாசா ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி விண்கல்லை கண்காணிக்கத் தொடங்கியது.  இந்த விண்கல்லிற்கு பென்னு  என்று விஞ்ஞானிகள் பெயரிட்டனர்.

ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலத்தின் வேலை என்ன?

ஓசிரிஸ் ரெக்ஸின் திட்டமானது சிறு கோள்களை ஆய்வு செய்து அவற்றின் குறைந்தது 60 கிராம்  மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதாகும். இவ்வாறு செய்யப்படுகின்ற ஆராய்ச்சியில் சூரியக்குடும்பத்தின் தோற்றமும் அதன் பரிணாம வளர்ச்சியும், கோள் உருவாக்கம், புவியியல் உயிர்களின் தோற்றம் ஆகியவற்றை கரிமச்சேர்மங்களின் மூலம் ஆராய்ச்சியில் தெரியவரும் என்கிறார்கள்.

ஓசிரிஸ் ரெக்ஸின்

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம்

இதற்காக அனுப்பப்பட்டது தான் ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம். 2016ல் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் 2 கோடி கி.மீ தூரம் பயணித்து 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி பென்னு விண்கல்லை நெருங்கியது. அதன்பிறகு தொலைவில் இருந்தபடியே தொடர்ந்து பல மாதங்கள் பென்னுவை ஆய்வு செய்து வந்த ஓசிரிஸ்ரெக்ஸ், விண்கல்லின் துகள்களை எடுப்பதற்கான இடத்தை தேர்வு செய்தது.

பின், விண்கல்லின் அருகில் மிக நெருக்கமாகச் சென்று ஓசிரிஸ் ரெக்ஸ் தனது இயந்திர கைகளால், விண்கல்லில் உள்ள மாதிரிகளை சேகரித்து தன்னிடமிருந்த கேப்ஸ்யூலில் சேகரித்துக்கொண்டது. பிறகு தனது பணியை 2020ம் ஆண்டு நிறைவு செய்த ஓசிரிஸ் ரெக்ஸ் தான் சேகரித்த மாதிரியுடன் பூமியை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது.

பூமியில் தரையிறங்கும் நிகழ்வு நேரலை!

இது வரும் செப்டம்பர் 24ம் தேதி பூமியை வந்தடையும். இந்நிகழ்வை நாசா தனது வெப்சைட் மற்றும் யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலமானது பூமியின் வளி மண்டலத்தை கடந்து பூமியை அடைந்தவுடன் விண்கலத்திலிருந்து கேப்ஸ்யூலானது  பிரிந்து, வளிமண்டலத்தை தாண்டி பாராஷூட் மூலம் உட்டா பாலைவனத்தில் தரையிறங்க இருக்கிறது.

உடனடியாக ஆய்வுப் பணிகள்

இவ்வாறு, அதிவேகமாக பாய்ந்து வரும் கேப்ஸ்யூல் பாராசூட் மூலம் படிப்படியாக வேகம் குறைந்து தரையில் விழுந்ததும் அதனை பாதுகாப்பாக ஆய்வுக்கூடத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். கேப்ஸ்யூல் விழும் இடத்தை துல்லியமாக கண்டறிவதற்காக விமானப்படையினர் ரேடார் மற்றும் கேமராக்களைப் பயன்படுத்தி கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள்.

கேப்ஸ்யூல் விழுந்ததும் மீட்புக் குழு அங்கு சென்று கேப்ஸ்யூலை பத்திரமாக மீட்கும். முதலில் அந்த கேப்ஸ்யூல், ஹெலிகாப்டர் மூலம் முகாமில் உள்ள சுத்திகரிப்பு அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தேவையற்ற வாயு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை நீக்கும். பின்னர் மறுநாள், விமானம் மூலம் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஆய்வுகள் மேற்க்கொள்ளப்படும். அதன்பின், விண்கல் மாதிரியை பிரித்து உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

விஞ்ஞானிகள்

இந்த பென்னு போன்ற சிறுகோள்கள் மிகவும் பழமையானவை என்பதால் இவற்றை ஆய்வு செய்வதால், பூமிக்கு தண்ணீர் மற்றும் வாழ்க்கையின் கட்டுமான தொகுதிகள் பற்றி அறிந்துக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆகவே, வரும் 24ம் தேதி தரையிறங்க இருக்கும் பென்னுவின் மாதிரி நமக்கு பல கேள்விகளுக்கான விடையைத் தெரிவிக்கும்.