டெக்

விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்த நாசா

விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்த நாசா

webteam

சந்திரயான் 2 விண்கலம் சுமந்து சென்ற விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்டதாக நாசா தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நாசா, லுனார் ரிகனைஸ்ஸான்ஸ் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரின் இருப்பிடம் அறியப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. விக்ரம் லேண்டரின் இருப்பிடம் குறித்து புகைப்படத்தையும் நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

முன்னதாக, சந்திரயான்2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோ சார்பில் விக்ரம் லேண்டர்‌ அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர்‌ உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவிற்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உதவியது. அதன்படி, நாசாவின் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை தற்போது கண்டுபிடித்திருக்கிறது.