சமீபத்தில் இஸ்ரோ XPoSat என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த XPoSatல் பொருத்தப்பட்டிருக்கும் XSPECT எனும் கருவியானது, பூமியிலிருந்து 6500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சூப்பர் நோவா ஒன்றை கண்டுபிடித்தது. இந்த சூப்பர் நோவா நண்டு வடிவத்தில் இருந்ததால் இதை கிராப் நெபுலா என்று விஞ்ஞானிகள் பெயரிட்டனர்.
இந்த கிராப் நெபுலாவிலிருந்து மக்னீசியம், இரும்பு, சிலிக்கான், கால்சியம் போன்றவை இருந்ததாக இஸ்ரோ தெரிவித்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
“கிராப் நெபுலாவில் நமது சூரியன் போன்று ஆயிரக்கணக்கான விண்மீன்கள் உள்ளன. மேலும், இதில் இருக்கும் தூசு மண்டலங்கள் நூற்றுக்கணக்கான சூரியன்களை உருவாக்கிக் கொண்டும் செயல் இழக்க வைத்துக்கொண்டும் இருக்கின்றது” என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதையும் படிக்கலாம் - விண்வெளியில் புதிய விண்மீன்களை உருவாக்கும் கிராப் நெபுலாவின் X கதிர் தரவுகள் சேகரித்த ’XPoSat’!
இது இப்படி இருக்க... சமீபத்தில் அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து சுமார் 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு பெரிய விண்மீன் வெடிப்பை (சூப்பர் நோவா) கண்டுப்பிடித்தது.
இந்த விண்மீன் வெடிப்பிலிருந்து பிறந்த நட்சத்திரக்கூட்டம் தூசு மண்டலங்களின் சேர்க்கை குதிரை தலையை போல காட்சியளிக்கிறது. ஜேம்ஸ் வெப் படம் பிடித்த இந்த நெபுலா படங்களை நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு சூப்பர் நோவாவும், நண்டு போல, குதிரைப்போல இருப்பது விஞ்ஞானிகளிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.