டெக்

சூரியனின் மேற்பரப்பில் கருந்துளைகள்... அழியப்போகிறதா பூமி?

சூரியனின் மேற்பரப்பில் கருந்துளைகள்... அழியப்போகிறதா பூமி?

webteam

சூரியனின் மேற்பரப்பில் கருந்துளைகள் உருவாகியிருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த துளைகளால் எந்த நேரத்திலும் பூமிக்கு பேராபத்து ஏற்படும் என்றும் நாசா கூறியுள்ளது.

சூரியன் மற்றும் சூரிய மண்டலம் குறித்து அமெரிக்காவின் நாசா உட்பட உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. பூமி கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் வாழும் தன்மையை இழந்து வருகிறது. ஆகவே மக்கள் வாழ்வதற்கு தகுதியுடைய கோள்கள் எதுவென விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சூரியனில் பெரிய கருந்துளைகள் உருவாகியிருப்பதை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டு பிடித்துள்ளது. நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்ட கருந்துளையை கண்டறிந்துள்ளது.
அதற்கு ஏஆர் 2665 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த துளை, பூமியை விட 19 மடங்கு பெரியதாகும். இந்தப் பகுதி சூரியனின் மற்றப் பகுதிகளை விட குளிர்ச்சியானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த கருந்துளை பகுதி சூரிய கதிர்களை உற்பத்தி செய்யும் பகுதி என்பதும் நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த பகுதி, பூமியை நோக்கி கொடிய கதிர்வீச்சுகளை வீசச்செய்கிறது. இந்த சீற்றங்கள் நமது சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய வெடிப்பு நிகழ்வுகளாக இருக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. இவை சில நிமிடங்களில் இருந்து பல மணி நேரங்கள் வரை நீடிக்கிறது என்றும் நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் சூரியன் தனது வாழ்நாளின் இறுதி கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் ஒரு பேரழிவு வெடிப்பு நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.