டெக்

நாசாவுக்கு 17 வயது மாணவர் ஃப்ரி அட்வைஸ்

நாசாவுக்கு 17 வயது மாணவர் ஃப்ரி அட்வைஸ்

webteam

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கதிர்வீச்சினை அளவிடும் முறையில் நாசா விண்வெளி ஆய்வுமையம் செய்த தவறினை இங்கிலாந்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விண்வெளியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வதுண்டு. அந்த வகையில், விண்வெளி ஆய்வின்போது உண்டாகும் கதிர்வீச்சு பதிவுகள் குறித்த தரவுகளை நாசா விண்வெளி ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்டது. அந்த தரவுகளைச் சேகரிக்கும் முறையில் உள்ள தவறு ஒன்றினை இங்கிலாந்தில் ஷெப்ஃபீல்டு நகரைச் சேர்ந்த மாணவர் மைல்ஸ் சாலமோன் கண்டறிந்து விஞ்ஞானிகளின் பாராட்டைப் பெற்றார். இங்கிலாந்தைச் சேர்ந்த விண்வெளி வீரர் டிம் பீக், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்த போது சேகரிக்கப்பட்ட தரவுகள் குறித்து சாலமோன் ஆய்வு நடத்தினார். அதில், கதிவீச்சின் அளவு பூஜ்யத்தில் இருக்கும்போதும், அதை உணரும் சென்சார்கள் எதிர்மறை அளவிலான கணக்கீடுகளை பூமிக்கு அனுப்பியதை சாலமோன் கண்டறிந்தார். சாலமோன் சுட்டிக்காட்டிய தவறினை சரிசெய்ய இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.