ஒரு நொடியை பில்லியனால் வகுத்தால் என்ன எண் கிடைக்குமோ அந்த நேரத்தைக் கூட அளவிடும் கடிகாரத்தை முளைக்கார நாசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மேரிலாண்டில் உள்ள கிரீன்பெல்ட்டில் இருக்கும் நாசா ஆய்வகத்தில் இந்த கடிகாரத்துக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது லேசர் பீம்களோடு இணைக்கப்பட்டு விண்கலத்துக்கும், கோள்களின் தரை பரப்புக்கும் உள்ள தொலைவைக் கண்டறிய உதவும் என்றும், ஒளியின் வேகத்தில் நகரும் பொருளின் தூரத்தை அறிய உதவும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். விண்வெளி ஆய்வுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நுண்ணிய கடிகாரம் விரைவில் ஆய்வு பயன்பாட்டுக்கு வரும் என்று நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கடிகாரம் மூலம் பூமியின் மேற்பரப்பில், சுமார் 500 அடி தூரத்தில் உள்ள பாறைகள் மற்றும் பனிப்பாறைகள் போன்றவற்றின் உயரத்தைத் துல்லியமாக அளவிட இது உதவும்.