டெக்

விண்வெளியில் இன்னொரு பூமி?... விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

விண்வெளியில் இன்னொரு பூமி?... விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

webteam

விண்வெளியில் சூரிய குடும்பத்தைப் போன்றதொரு நட்சத்திரக் கூட்டத்தினை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே 816 நட்சத்திரங்களைக் கொண்ட சூரியகுடும்பத்தைப் போன்றதொரு நட்சத்திர குடும்பத்தினைக் கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திரங்களில் பாதியளவுக்கு புதிய நட்சத்திரங்கள் என்று தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், அவற்றில் பெரும்பாலானவை உயிர்வாழ உகந்த சூழல் கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். ஏறக்குறைய 50 லட்சம் ஆண்டுகளாக பார்வைக்கு தென்படாமல் இருந்த இந்த நட்சத்திரக் கூட்டம் குறித்து ஆய்வு செய்வதன் மூலம், நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகிறது என்பதை அறிந்துகொள்ளலாம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அகச்சிவப்பு கதிர்கள் (Infrared) கேமிரா மூலம் ஆய்வு செய்து வந்த ஆய்வாளர்கள் குழு, பூமி போன்றே உயிர்வாழ உகந்த சூழல் நிலவும் நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அந்த நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.