மயில்சாமி அண்ணாதுரை File image
டெக்

“விண்வெளி ஆய்வு மையத்தை நிலவில் அமைப்போம்...” - மயில்சாமி அண்ணாதுரை

“இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்கலம் தனது அடுத்த இலக்கை, அடுத்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி வெற்றிகரமாக அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது” - இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை

PT WEB

நிலவில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து அமைக்க வேண்டும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டியளித்துள்ளார்.

மயில்சாமி அண்ணாதுரை

-கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரில் இயங்கி வரும் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில், கையருகே நிலா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ முன்னாள் இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, “அடுத்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்கலமான ஆதித்யா எல்-1, தனது அடுத்த இலக்கை வெற்றிகரமாக அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர், “சூரியனை ஆய்வு மேற்கொள்ள இந்தியா அனுப்பிய, ஆதித்யா என்ற விண்கலம், தனது பயணத்தில், L -1 என்ற புள்ளியை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

பூமியிலிருந்து சுமார் 1.5 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அது, அடுத்தகட்ட இலக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி அடையும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் ஆயுள் காலம் விரைவில் முடிவடைகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் இணைந்து, வரும் காலத்தில் நிலவில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

இந்த விழாவில் சிகரம் சதீஷ், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.