டெக்

கீ பேட் ஷார்ட்கர்ட்ஸ் வசதியுடன் வெளிவந்துள்ள பிளாக்பெர்ரி கீ ஒன் ஸ்மார்ட்போன்

கீ பேட் ஷார்ட்கர்ட்ஸ் வசதியுடன் வெளிவந்துள்ள பிளாக்பெர்ரி கீ ஒன் ஸ்மார்ட்போன்

webteam

பிளாக்பெர்ரி நிறுவனம் கீ ஒன் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்றுவரும் மொபைல் வேர்ல்டு கான்ஃபரன்சில் அறிமுகம் செய்துள்ளது.

பிளாக்பெர்ரி கீ ஒன் ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதத்தில் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.36,584 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் ஒவ்வொரு கீயிலும் ஷார்ட்கர்ட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ‘i’ பட்டனை க்ளிக் செய்தால் இன்ஸ்டாகிராம் செயலிக்கு நேரடியாக சென்று விட முடியும். ஸ்மார்ட்போன்கள் வடிவமைப்பை நிறுத்திக் கொண்ட பிளாக் பெர்ரி நிறுவனம், கடைசியாக வடிவமைத்த போன் இதுவாகும்.

பிளாக்பெர்ரி கீ ஒன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

* 4.5 இன்ச் டிஸ்பிளே மற்றும் 1620 x 1080 பிக்சல் ரெசல்யூசனுடன் இதன் திரை அகலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

* ஸ்னாப்ட்ராகன் 625 ப்ராசஸசர், 32 ஜிபி மெமரி, கைரேகை மூலம் இயங்கும் சென்சார் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.

*4 ஜி தொழில்நுட்பத்துடன், 3ஜிபி ரேம் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* கேமரா பிரியர்களின் ரசனைக்கேற்ப பின்பக்க கேமரா 12 மெகாபிக்சல், 8 இன்ச் மெகாபிக்சல் முன்பக்க கேமரா வசதியுடன் அசத்தலாக வெளிவந்துள்ளது.

* இதன் பேட்டரி திறன் 3,505 மி. ஆம்பியர் தரத்தில் அமைந்துள்ளது.

* 180 கிராம் எடையுடன் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தில் கீ ஒன் மாடல் ஸ்மார்ட்போன் இயங்குகிறது.