டெக்

ஜனவரி 26-இல் அறிமுகமாகிறது மோட்டோரோலா எட்ஜ் S

ஜனவரி 26-இல் அறிமுகமாகிறது மோட்டோரோலா எட்ஜ் S

EllusamyKarthik

வரும் 26-ஆம் தேதியன்று அறிமுகமாகிறது மோட்டோரோலாவின் எட்ஜ் S ஸ்மார்ட்போன். குவால்கம் ஸ்னாப்டிராகன் 870 SoCயில் வெளிவந்துள்ளது. 7nm பிராசஸரில் இயங்குகிறது. சீனாவின் மைக்ரோ பிளாகிங் சைட்டான Weibo-வில் தெரிவித்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன் பின்பக்கத்தில் நான்கு கேமராவும் மற்றும் இரண்டு முன்பக்க செல்பி கேமராவும் இந்த போனில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

முதற்கட்டமாக மோட்டோரோலா எட்ஜ் S ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைப் சி சார்ஜிங் போர்ட் இந்த போனில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. இந்தியாவில் அறிமுகமாகும் தேதி இன்னும் உறுதியாகவில்லை.