டெக்

இந்தியாவில் அறிமுகமாக உள்ள மோட்டோ X4 ஸ்மார்ட்ஃபோன்

இந்தியாவில் அறிமுகமாக உள்ள மோட்டோ X4 ஸ்மார்ட்ஃபோன்

webteam

மோட்டோ X4 ஆண்ட்ராய்டு ஒன் அடிப்படை ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் பதிவிட்ட ட்விட்டர் ஹேஷ்டாக் #xperience. இது அந்நிறுவனத்தின் புதிய வெளியீடான மோட்டோ எக்ஸ்4-ஐ குறிக்கிறது. மோட்டோவின் இந்த மாடல் கேட்ஜட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மோட்டோ X4 ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள்:

5.20 இன்ச் டிஸ்ப்ளே, புராசஸர் 2.2 கிகாஹெட்ஸ் ஆக்டோகோர், முன்புற கேமரா 16 மெகாபிக்ஸல், ரெசல்யூஷன் 1080x1920 பிக்ஸல்ஸ், 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளம், பின்புற கேமரா (ரியர் கேமரா) 12 மெகாபிக்ஸல், பேட்டரி திறன் 3000mAh ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.