பவர்ஃபுல் பேட்டரி கொண்ட மாடல் குறித்தான டீசர் ஒன்றை மோட்டோரோலா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, மோட்டோ நிறுவனம் மோட்டோ சி மற்றும் மோட்டோ சி ப்ளஸ் போன்ற மாடல்களை வெளியிட்டது. இதையடுத்து மோட்டோ E4 ப்ளஸ் என்ற மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டீசர் ஒன்றை மோட்டோரோலா வெளியிட்டுள்ளது. அதில் பேட்டரி படத்தை குறிப்பிட்டு oops என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், இந்த மாடல், மோட்டோ E4 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோனாக இருக்கலாம் என எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
4G LTE, வை-ஃபை 802.11 b/g/n, புளூடூத் 4.1, ஜிபிஎஸ்/A-ஜிபிஎஸ் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்றவற்றுடன் 5,000mAh திறன் பெற்ற பேட்டரியால் இயக்கப்படும் வகையிலான சிறப்பம்சத்துடன் வெளிவரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.