லெனோவோ நிறுவனத்தின் மோட்டோ சி பிளஸ் ஃஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஃபோன் அதிக பேட்டரி திறனை கொண்டுள்ளதோடு விலையும் குறைவாக உள்ளதால் இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த ஸ்மார்ட்ஃபோன் 5. இன்ச் எச்டி 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே, 1.3 மீடியாடெக் MT6737 குவாட்-கோர் கோர்டெக்ஸ், 1ஜிபி அல்லது 2ஜிபி ரேம், 8 எம்பி ரியர் கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா, எல்இடி பிளாஷ், 4000 mah பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த ஃபோன் மெட்டலிக் செர்ரி, பியர்ல் வைட், ஃபைன் கோல்டு, மற்றும் ஸ்டார்ரி பிளாக் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கிறது. இதன்விலை 8000 முதல் 10000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.