டெக்

2017ம் ஆண்டில் டெக் உலகைக் கலக்க இருக்கும் கேட்ஜெட்டுகள்

2017ம் ஆண்டில் டெக் உலகைக் கலக்க இருக்கும் கேட்ஜெட்டுகள்

webteam

டெக் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய ஒவ்வோர் ஆண்டும் நிறுவனங்கள் போட்டிபோட்டிக் கொண்டு புதிய கேட்ஜெட்டுகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் 2017ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சில கேட்ஜெட்டுகள் குறித்து பார்க்கலாம்.

சாம்சங்கின் மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன்:

தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன் கேட்ஜெட் பிரியர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் டிஸ்ப்ளே வளையும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனுக்கான காப்புரிமைக்காக சாம்சங் நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள நிலையில், நடப்பாண்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 8:

ஆப்பிள் நிறுவனத்தின் பெஞ்ச் மார்க் தயாரிப்பான ஐபோன் ஸ்மார்ட் போன்கள் 2017-ல் 10ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறது. இதையொட்டி முழுக்க முழுக்க கண்ணாடியால் உருவாக்கப்பட்ட ஐபோன் 8 மாடலை வெளியிட அந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் இரவு, பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அந்த ஸ்மார்ட்போன் எல்ஈடி டிஸ்ப்ளே கொண்டதாகவும் இருக்கும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

சாம்சங் கேலக்ஸி நோட் 8:

கேலக்ஸி நோட் 7 மாடல் ஸ்மார்ட் போன்களால் ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட தீப்பிடிக்கா தன்மை கொண்ட கேலக்ஸி நோட் 8 மாடலை சாம்சங் நிறுவனம் இந்தாண்டு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

கூகுள் ஸ்மார்ட்வாட்ச்:

கேட்ஜெட் பிரியர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கூகுள் ஸ்மார்ட் வாட்ச் இந்தாண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.0 இயங்குதளத்தில் இயங்கும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள கூகுள் ஸ்மார்வாட்ச்சுகள் ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்டோஸ் 10 இயங்குதளத்துக்கான விஆர் ஹெட்செட்:

விர்ச்சுவல் ரியாலிட்டியை நோக்கி டெக் உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது எனலாம். இந்தசூழலில் உலகின் பெரும்பாலானோர் உபயோகிக்கும் விண்டோஸ் இயங்குதளத்திலும் விஆர் பயன்பாட்டை அதிகரிக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது. அதன்படி, விண்டோஸ் 10 இயங்குதளத்துக்கான விஆர் ஹெட்செட் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்படும் என்கிறார்கள் கேட்ஜெட் பிரியர்கள்.