டெக்

நிலாவில் ஏரிகள் இருப்பதாக ஆய்வு தகவல்

நிலாவில் ஏரிகள் இருப்பதாக ஆய்வு தகவல்

webteam

நிலாவில் உள்ள பாறைகளுக்கு அடியில் மிகப்பெரிய பெரிய நீர்த்தேக்கங்கள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ விண்கலத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட மண் மாதிரிகள் மற்றும் பாறைகளைக் கொண்டு சந்திரன் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஆய்வின் படி சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அங்குள்ள பாறைகளுக்கு அடியே மிகப்பெரிய ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்திரனின் உட்புறம் நீர் நிறைந்திருப்பதால், சந்திரன் தொடர்பான ஆய்வில் எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அமெரிக்க ஹவாய் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஷுஆய் லி கூறுகிறார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திரனில் உள்ள எரிமலையிலிருந்து வெளியான கண்ணாடி துகள்களில் தண்ணீரின் பிம்பங்கள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.