ஆசியாவின் முதல் ஹைபிரிட் பறக்கும் கார் மாதிரியை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆய்வு செய்தார்.
பறக்கும் கார் குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், தரையிலும் வானிலும் செல்லக்கூடிய காரின் மாதிரியை வினாடா ஏரோமொபிலிட்டி நிறுவனத்தின் இளம் அணி உருவாக்கி வருவதாக கூறியுள்ளார். இது வெற்றியடையும் போது பறக்கும் கார் மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமல்லாது அவசரகால மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் பயன்படும் என கூறியுள்ளார்.