அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா pt desk
டெக்

6ஜி தொழில்நுட்பம்: “இந்தியா உலகிற்கு முன்னோடியாக இருக்கும்”- அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கை

செல்போன்களில் 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக இருக்கும் என மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

PT WEB

சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிய அமைச்சர் சிந்தியா, “இன்று இந்தியாவில் 117 கோடி கைப்பேசி இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் 25 கோடியாக இருந்த இணைய சேவை இணைப்புகள் இன்று 97 கோடியாக அதிகரித்துள்ளது.

5G service

பாரத்நெட் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 2,46,000 கிராமப்புறங்களில் இணையதள இணைப்புகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் புரட்சிகரமான திட்டத்தின் மூலம் இந்தியா தொழில்நுட்பத்தின் மையமாக மாறும்.

5ஜி தொழில்நுட்பத்தை அதிவேகமாக செயல்படுத்தும் நாடாக இந்தியா திகழ்கிறது. நகர்ப்புறப் பகுதிகளில் 98 சதவீதம் இந்த தொழில்நுட்பம் பரவியுள்ளது.

4G 5G 6G

4ஜி தொழில்நுட்பம் உலகில் அறிமுகமானபோது, இந்தியா உலகைப் பின்பற்றியது. 5ஜி அறிமுகமானபோது உலகத்தோடு இணைந்து பயணித்தது. ஆனால் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக, 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.