மைக்ரோசாப்ட் புதியதலைமுறை
டெக்

மொத்தமாய் முடங்கிய மைக்ரோசாஃப்ட்! உலகம் முழுவதும் விமானசேவை பாதிப்பு - கலாய்த்து தள்ளிய எலான் மஸ்க்!

Jayashree A, PT WEB

இன்று காலை முதல் மைக்ரோசாப்ட் நிறுவன, கிரவுட்ஸ்டிரைக்கில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக இணையதளசேவை முடங்கியது.

இணைய பாதுகாப்பு நிறுவனமான கிரவுட்ஸ்டிரைக்கில் ஏற்பட்ட ஒரு பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சிக்கலில் இருந்தது. உலகின் பெரும்பாலான வங்கிகள், செய்தி நிறுவனங்கள், ஐடி துறை என அனைத்தும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் 911, லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட பல முக்கிய தளங்கள் முடங்கியிருக்கின்றன.

ஆஸ்திரேலியா, ரஷ்யா, நெதர்லேண்டு போன்ற நாடுகளின் விமான சேவையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஹாங்காங்கில் கைகளால் எழுதப்பட்ட டிக்கெட்டுகளை பயணம் செய்பவர்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.

இந்தியாவில் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு நாடுகளின் சூப்பர்மார்க்கெட் போன்ற அத்தியாவசிய இடங்களில் பணம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டியிருக்கிறது.

மென்பொருள் பிரச்னையால் இந்தியாவில் 150-க்கும் மேற்பட்ட விமானங்களும், உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி இருக்கையில் இந்தியாவிலும் பயணிகளுக்கு கைகளால் எழுதி போர்டிங் பாஸ் கொடுத்து வருகிறார்கள். மேலும், பயணிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாக சேவை பாதிக்கப்பட்ட தகவலை விமானசேவை நிறுவனங்கள் தெரிவித்தும் வருகின்றனர்.

அஸ்வினி வைஷ்ணவ்

”முடக்கத்திற்கு இதுதான் காரணம்“

மைக்ரோசாப்டின் இத்தகைய கோளாறுக்கு காரணம், சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என்று மைக்ரோசாப் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக மைக்ரோசாப் அப்டேட் செய்தவர்களின் கணினியில்தான் இத்தகைய கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மைக்ரோசாப் பயனாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மென்பொருள் அப்டேட் ஆனவுடன் வழக்கம் போல பழைய தரவுகளுடன் கணினி செயல்பட தொடங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ”மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. என்ன பிரச்னை என்பது கண்டறியப்பட்டு தீர்வு காணும் முயற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று மத்திய அமைச்ச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி இருக்கிறார்.

வங்கதேசத்தில் தமிழக மாணவர்கள் தவிப்பு

வன்முறையால் வங்கதேசத்தில் இருந்து தமிழகம் திரும்ப முயன்ற மாணவர்கள், மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பிரச்னையால் தலைநகர் டாக்காவில் தவித்து வருகின்றனர்.

காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் ரத்தாகியுள்ளதால், மாணவர்கள் தாயகம் திரும்ப இயலாமல், காலை முதல் உணவு இல்லாமலும் மாணவர் தவிக்கின்றனர்

சைபர் தாக்குதல் அல்ல: Crowdstrike

உலகளாவிய மைக்ரோசாஃப்ட் கோளாறு ஒரு சைபர் தாக்குதல் கிடையாது என crowdstrike விளக்கம் அளித்துள்ளது.

“பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் crowdstrike பிரதிநிதிகளை தொடர்புகொள்ளலாம். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவோம். சர்வர் கோளாறு பிரச்னை கண்டறியப்பட்டு சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன” Crowdstrike CEO என்று தெரிவித்துள்ளார்.

பங்குச்சந்தைகளிலும் பாதிப்பு!

மைக்ரோசாஃப்ட் கோளாறால் பங்குச் சந்தைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னணி தரகு நிறுவனங்களான மோதிலால் ஆஸ்வால், 5 பைசா, ஏஞ்சல் ஒன் உள்ளிட்ட வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகத்தில் பாதிப்பு இல்லை.

மைக்ரோசாஃப் கோளாறு - கலாய்த்து தள்ளிய எலான் மஸ்க்!

மைக்ரோசாஃப்ட் கோளாறை பங்கமாக கலாய்த்து இருக்கிறார் எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க். எல்லாம் டவுன் ஆகிவிட்டது இந்த ஆப் மட்டும் வேலை செய்கிறது என்ற மீம்ஸை அவர் எக்ஸ் தளத்தில் ஷேர் செய்துள்ளார்.

அதன்பிறகு மைக்ரோசாஃப்ட்டை விட மேக்ரோஹார்ட் சிறந்தது என 2021 ஆம் போட்ட பதிவை மீண்டும் ஷேர் செய்துள்ளார்.

என்ன நடந்தது என்பதை முழுமையாக அறிய இந்த வீடியோ தொகுப்பை காணலாம்...