டெக்

இந்தியாவில் அறிமுகமானது மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன்

இந்தியாவில் அறிமுகமானது மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன்

EllusamyKarthik

இந்திய எலக்ட்ரானிக் சாதன உற்பத்தி நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. நிச்சயம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை இந்த போன் பூர்த்தி செய்யும் என தெரிவித்துள்ளார் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா. 

6.43 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G95 SoC சிப்செட், 4ஜிபி ரேம், 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ரியர் சைடில் நான்கு கேமரா, அதில் பிரைமரி கேமரா 48 மெகாபிக்சல். 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, 30 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி, 4ஜி கனெக்டிவிட்டி, டைப் சி சார்ஜிங் போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக் மாதிரியானவற்றை இந்த போன் கொண்டுள்ளது. 

கருப்பு மற்றும் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் இந்த போன் வரும் 30-ஆம் தேதி முதல் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.