டெக்

வரும் 2022-இல் புதிய எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் காரை அறிமுகம் செய்கிறது MG மோட்டார் இந்தியா!

வரும் 2022-இல் புதிய எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் காரை அறிமுகம் செய்கிறது MG மோட்டார் இந்தியா!

EllusamyKarthik

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹலோல் கார் உற்பத்தி செய்யும் ஆலையை கொண்டுள்ளது MG மோட்டார் இந்தியா நிறுவனம். இந்நிறுவனம் தற்போது ஹெக்டர், ஹெக்டர் பிளஸ், க்ளாஸ்டர், ஆஸ்டர் மாதிரியான கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இது தவிர ZS என்ற மின்சார வாகனத்தையும் (EV) இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. 

இந்த நிலையில் வரும் 2022-இல் மின்சார சக்தியில் இயங்கும் கிராஸ்ஓவர் வகை சொகுசு காரை MG அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் Tigor EV மற்றும் Nexon EV என இரண்டு எலக்ட்ரிக் கார்களுடன் சந்தையில் போட்டி போட MG-யின் இந்த புதிய தயாரிப்பு களம் காண்கிறாதம்.  

EV செக்மெண்ட் கார்களில் வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புள்ள நாடுகளில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார் MG மோட்டார் இந்தியாவின் தலைவர் ராஜீவ். 

இந்த புதிய காரின் விலை 10 முதல் 15 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்திய சந்தையில் விற்பனையாகி வரும் ZS EV கார் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 21 மாறும் 24.68 லட்ச ரூபாயாக உள்ளது. ZS EV கார் மாதத்திற்கு 400 முதல் 500 புக்கிங் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.