செவ்வாய்க்கிழமையான இன்று (மார்ச் 5) மாலை இந்தியாவிலுள்ள உலகின் பல பகுதிகளிலும் சமூக ஊடக தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிழந்தன. இந்த இரண்டு தளங்களிலும் உள்ள உள்நுழைவு சிக்கல்கள் குறித்து பயனர்கள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டனர். சிலரால் Instagram பக்கங்களைப் புதுப்பிக்க முடியவில்லை. பல பயனர்கள் கடவுச்சொற்களை மாற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்நிலையில் இந்த இரண்டு தளங்களிலும் உள்ள உள்நுழைவு சிக்கல்கள் குறித்து பயனர்கள் புகார் அளிக்கத்தொடங்கினர். அதேநேரத்தில் விரைவிலேயே YouTube பயனர்களும் இதேபோன்ற சிக்கலை எதிர்கொள்ளத் தொடங்கினர். உடன் வாட்ஸ்அப் பிஸினஸ் அக்கவுண்ட்களும் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
திடீர் மெட்டா ஆப்கள் செயலிழப்பு பற்றிய Downdetector.com அறிக்கையின் படி, காலை 10 மணியிலிருந்தே பெரும்பாலான பயனர்கள் தங்களுக்கு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஓப்பானாகவில்லை என்றும், “Log in again; session expired; couldn't refresh feed" முதலிய கூற்றுகளை டிஸ்பிளேவில் பெற்றதாகவும் புகாரளித்துள்ளனர். டவுன்டிடக்டர் கூற்றுப்படி பேஸ்புக்கிற்கு 3,00,000 க்கும் மேற்பட்ட செயலிழப்பு அறிக்கைகளும், Instagram க்கு 20,000 க்கும் மேற்பட்ட அறிக்கைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்கின் மெட்டா ஆப்களுக்கு போட்டியாக செயல்பட்டுவரும் மஸ்க்கின் எக்ஸ் (முன்னர் டிவிட்டர்) வலைதளம், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முதலிய ஆப்கள் டவுன் ஆன நிலையில் கலாய்த்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளது.
X-ன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில், “நீங்க எல்லோரும் எதற்கு இங்கு வந்திருக்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியும்” என பதிவிட்டுள்ளது. உடன் எக்ஸ் தளத்தில் பல பயனர்கள் ”எங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஹேக்கிங் செய்யப்பட்டது என்றும், சைபர் அட்டாக் நடந்துவிட்டது என்றும்” பதிவிட்டு டிரெண்ட்டாக எக்ஸ் தளம் கலாட்டாகவாக மாறியது.
இதற்கிடையில் மெட்டா செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பயனர்களுக்கு ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், "எங்கள் சேவைகளை அணுகுவதில் மக்கள் சிக்கலை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் இப்போது அதைச் சரிசெய்து வருகிறோம்" தெரிவித்துள்ளார்.