டெக்

அம்மாடியோவ்.. இவ்வளவு கோடியா! -பாதுகாப்பு செலவை கிடுகிடுவென உயர்த்திய மார்க் ஜுக்கர்பெர்க்

அம்மாடியோவ்.. இவ்வளவு கோடியா! -பாதுகாப்பு செலவை கிடுகிடுவென உயர்த்திய மார்க் ஜுக்கர்பெர்க்

JustinDurai

செலவினத் திட்டங்களை குறைப்பதற்கான சுமார் 11,000 பேரை பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம், தற்போது மார்க் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்பு செலவுகளை 3 மடங்காக உயர்த்தியிருப்பதற்கு சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களை கொட்டி வருகின்றனர்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமாக உள்ள மெட்டா நிறுவனத்தின் உரிமையாளராக மார்க் ஜுக்கர்பெர்க் இருக்கிறார். உலக அளவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, பெரும்பாலான முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மெட்டா நிறுவனம் அதன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, ஒரே அடியாக 11 ஆயிரம் பேரை, அதாவது உலகளவில் உள்ள தனது மொத்த ஊழியர்களில் 13 சதவிகிதம் பேரை கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்தது. அதோடு புதிய பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணியையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

இச்சூழலில் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகரியான மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பிற்கான செலவு ரூ.33.08 கோடியிலிருந்து சுமார் 116 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செலவினத் திட்டங்களை குறைப்பதற்கான சுமார் 11,000 பேரை பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம், தற்போது தலைமை செயல் அதிகாரியின் பாதுகாப்பு செலவை 3 மடங்காக உயர்த்தியிருப்பதற்கு சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களை கொட்டி வருகின்றனர்.

மார்க் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்புத் திட்டத்துக்கான செலவு சூழ்நிலைகளின் காரணமாக எடுக்கப்பட்டதாகவும், அது காலத்திற்கேற்ப அவசியமானது என்றும் மெட்டா நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.