டெக்

மாற்றுத்திறனாளி மனைவிக்காக கணவர் உருவாக்கிய “நாட் ஏ வீல் சேர்” - வியப்பூட்டும் தயாரிப்பு

மாற்றுத்திறனாளி மனைவிக்காக கணவர் உருவாக்கிய “நாட் ஏ வீல் சேர்” - வியப்பூட்டும் தயாரிப்பு

webteam

“நினைத்த இடத்திற்கெல்லாம் செல்ல முடியும்” - கணவர் தயாரித்த வீல் சேரால் மனைவி பெருமிதம்

தனது மாற்றுத்திறனாளி மனைவிக்காக நினைத்த இடத்திற்கு எல்லாம் தனியாக செல்லும் வகையில் பிரத்யேக வீல் சேரை கணவர் உருவாக்கியுள்ளார். இது தற்போது பெரிய அளவிலான உற்பத்திக்கு தயாராக உள்ளது.

தனது காதலியை மகிழ்விக்க ஒரு மனிதன் நினைத்துவிட்டால் அவரை தடுக்க எதுவும் முடியாது. அதிலும் அவருக்கு திறமை இருந்தால் அது மிகவும் எளிமையாகவும் முடிந்து விடும். கடந்த 2005 ஆம் ஆண்டு ஒரு விபத்தின்போது கேம்ப்ரி கெய்லர் தனது கால்களை இழந்தார். ஆனால் ஒரு திறமையான காதலனை தேர்ந்தெடுத்து வைத்திருந்தது அவரின் அதிர்ஷ்டம்.

அப்போது சாதாரண எலெக்ட்ரானிக்ஸ் பழுது பார்க்கும் நபராக இருந்த ஜாக் நெல்சன், கெம்ப்ரி கெய்லர் கனவுகளை நினைவாக்க முடிவு செய்தார். அதற்காக இரண்டு இருச்சக்கர வாகனங்களை ஒன்றாக இணைத்து நடுவில் ஒரு சீட் அமைத்து மின்சார நாற்காலியை உருவாக்கியுள்ளார். அது அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லும் வகையில் அமைந்துள்ளது.

இதுகுறித்து கேம்ப்ரி கெய்லர் கூறும்போது, “இந்த நாற்காலி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இது தனக்கு ஒரு புதிய அளவிலான சுதந்திரத்தை கொடுத்துள்ளது. தடைகளை எளிதில் சமாளிக்க முடியும். இதன்மூலம் அதிக தூரத்தை என்னால் கடக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

அவர்கள் இப்போது ‘நாட்-எ-வீல்சேர்’ என்று அழைக்கப்படும் வாகனத்தை பெருமளவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். காலப்போக்கில் அதன் வடிவமைப்பையும் அவர்கள் மேம்படுத்தியுள்ளனர். மேலும் இது இறுதியில் நம்பகமான ஆஃப்-ரோடராக மாறியுள்ளது.

இதுகுறித்து ஜாக் கூறும்போது, “சக்கர நாற்காலியில் ஷாப்பிங் செல்வது வெறுப்பாக இருக்கும். அதனால் நானும் கேம்ப்ரியும் சேர்ந்து எங்களில் சொந்த சாலை சக்கர நாற்காலியை உருவாக்க முடிவு செய்தோம். இது அதிக தூரம் கடப்பதற்கு மிகவும் எளிமையான வாகனம்.

நாட்-ஏ-வீல்சேர்’ உருவாக்கும் போது அது மிகவும் அதிமான விலையாக கருதினேன். அதனால் அனைவருக்கும் மலிவாக கிடைக்கூடிய நாற்காலியை உருவாக்க நாங்கள் விரும்பினோம். அந்த சக்கர நாற்காலியில் தரமான பொருட்களை பொருத்தி மலிவான விலையில் எளிமையான, போதுமான வடிவமைப்பு ஆகியவை கொண்டுவர சிறிது நேரம் எடுத்தன. ஆனால் தற்போது சந்தையில் உள்ள மற்ற ‘ஆஃப்-ரோட் சக்கர நாற்காலிகள்’ விலையை விட எல்லோரும் அனுபவிக்கக்கூடிய ஒன்று நம்மிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இந்த வாகனம் வீட்டில் உபயோகப்படுத்துவதற்கு அல்ல. கேம்ப்ரி வீட்டில் சாதாரண வீல்சேரையே உபயோகிக்கிறார். ஆனால் அவர் வெளியில் செல்லும்போதெல்லாம், ‘நாட்-ஏ-வீல்சேர்’ பயன்படுத்துகிறார். இதில் அலுமினிய பம்பர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை பிரிக்க முடியும் என்பதால் எளிதால் கார் மற்றும் ட்ரக் மூலம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம்” எனத் தெரிவித்தார்.