டெக்

காற்றை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் கொண்ட மாஸ்க்..!

காற்றை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் கொண்ட மாஸ்க்..!

webteam

காற்றை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் கொண்ட மாஸ்கை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்தது

உலகமே கொரோனாவால் ஸ்தம்பித்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம் இது. வெளியே செல்லும்போது நம்மை பாதுகாக்க மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. நம் வாழ்க்கை முறையில் மாஸ்க் என்பதும் கட்டாயமாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் விதவிதமான வித்தியாசமான மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எல்இடி மாஸ்குகள், தங்க மாஸ்க், வைர மாஸ்க் என பல மாஸ்குகள் கவனத்தை பெறுவதற்காகவே வெளியாகியுள்ளன.

ஆனால் அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப உதவியுடன் தற்போது ஒரு மாஸ்க் தயாராகியுள்ளது. பிரபல நிறுவனமான எல்ஜி இந்த காற்றை சுத்தப்படுத்தும் மாஸ்கை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு வருடமும் பெர்லினில் வீட்டு தொழில்நுட்பத்துடன் பயன்படுத்தக் கூடிய வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான கண்காட்சியும் நடத்தப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படவில்லை.

இந்தக் கண்காட்சியில் காற்றை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் கொண்ட மாஸ்கை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த மாஸ்கில் H13 HEPA காற்று வடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொழில்நுட்பம் தான் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏர் புயூரிபயர்களில் பயன்படுத்தப்படுகின்றன. அணிந்திருப்பவரின் மூச்சு வேகத்துக்கு ஏற்ப செயல்படவும் இந்த மாஸ்க் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக தாங்கக் கூடிய பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டாலும் இந்த மாஸ்க் விலை மற்றும் சந்தைகளில் எப்போது கிடைக்கும் போன்ற தகவல்கள் வெளியாகவில்லை