லெனோவோ நிறுவனத்தின் K8 நோட் இன்று முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய இந்த ஸ்மார்ட்ஃபோன் 3 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி என இரு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.12,999 மற்றும் ரூ.13,999 ஆகும்.
இந்த ஸ்மார்ட்ஃபோன் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டது. அதன்படி இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், ஐடியாவுடன் இணைந்து அறிமுக சலுகையாகயாக ரூ.343-க்கு 64 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் ஆபஃரை அளித்துள்ளது.
இதில், 5.5 இன்ச் எஃப்.ஹெச்.டி. 1080 டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் புரொடக்ஷன், 13 மெகாபிக்சல் கொண்ட டூயல் லென்ஸ் ரியர் கேமரா, 5 மெகா பிக்சல் சென்சார், செல்ஃபி ஃபிளாஷ், ஆன்டிராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம், 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன், டர்போ சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.