டிவிட்டருக்கு மாற்றாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ’கூ’ சமூகவலைதளத்தில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பதிவிட்டதாக முடக்கப்பட்ட கணக்குகளை, திரும்பவும் பயன்படுத்த டிவிட்டர் நிர்வாகம் அனுமதி அளித்தது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், டிவிட்டர் நிர்வாகத்துக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், டிவிட்டருக்கு மாற்றாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள ’கூ’ சமூகவலைதளம் கவனம் பெற்றுவருகிறது. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத், மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே, ஆன்மிக குரு ஜகி வாசுதேவ் உள்ளிட்டோர் ’கூ’ சமூகவலைதளத்தில் இணைந்துள்ளனர்.