டெக்

ப்ளூ வேல் கேமினை அதிகம் தேடிய இடம் இந்திய நகரம்

webteam

உயிர்பறிக்கும் விளையாட்டான ப்ளூ வேல் கேமினை கூகுளில் அதிகம் தேடிய நகரங்களின் பட்டியலில் இந்திய நகரம் இடம் பிடித்துள்ளது.

ப்ளூ வேல் சார்ந்த தேடல்களின் கூகுள் டிரென்ட்ஸ் பட்டியலில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருந்திருக்கிறது.  இந்நிலையில் உலக அளவில் 30 நகரங்களில் கூகுள் டிரென்ட்ஸ் பட்டியலில் புளூ வேல் இடம்பெற்றுள்ளது. 50 படி நிலைகலைக் கொண்ட ப்ளூ வேல் கேமினை கடந்த 12 மாதங்களில் கூகுளில் அதிக முறை தேடப்பட்ட நகரங்களில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது. ப்ளூ வேல் தொடர்பான ஆன்லைன் தேடல்களில் ஐந்து இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. 

ப்ளூ வேல் கேமினை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் தேடப்படுவதுடன் இந்த விளையாட்டினால் தற்கொலை செய்து கொண்டவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக தேடப்பட்ட தகவல்களே அதிகம் என்கிறது ஆய்வு. இதில் கொல்கத்தா வாசிகளே ப்ளூ வேல் தொடர்பான தகவல்களை அதிகம் தேடியுள்ளனர். கூகுளில் புளூ வேல் சார்ந்த தேடல்களில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ள நிலையில், சான் அன்டோனியோ, நைரோபி, கவுகாத்தி, சென்னை, பெங்களூரு, மும்பை, புதுடெல்லி, ஹவுரா, பிரான்ஸ் உள்ளிட்ட நகரங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.