டெக்

பாதுகாப்பான பாஸ்வேர்டு பென் டிரைவ்

பாதுகாப்பான பாஸ்வேர்டு பென் டிரைவ்

webteam

பல ரகசியமான தரவுகளை சேமித்து வைக்க நாம் பென் டிரைவை பயன்படுத்துகிறோம். ஆனால் அது பிறர் கைக்கு சென்று விட்டால் அதில் உள்ள விஷயங்கள் மற்றவருக்கு சென்றுவிடும். இதனை முறியடிக்க கிங்ஸ்டன் நிறுவனம், பென் டிரைவில் பாஸ்வேர்டு போடும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

கிங்ஸ்டன் நிறுவனம், டேட்டா டிராவிலர் 2000, யுஎஸ்பி 3.1 எனும் பென் டிரைவை அறிமுகம் செய்துள்ளது. இந்த பென் டிரைவில் ஆல்பா நியூமரிக் கீபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த பென் டிரைவில் பாஸ்வேர்டு போட்டு லாக் செய்ய முடியும். இதனால் அதில் உள்ள டேட்டாக்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். அதுமட்டுமின்றி, FIPS 197 சான்று பெற்ற என்க்ரிப்ஷன் உள்ளதால் டேட்டாக்களில் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கப்படுகிறது.

சிறப்பான தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த பென் டிரைவ் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி போன்ற சேமிப்பு திறன் வசதியுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.10,000, ரூ.14,000 மற்றும் ரூ.18,000 என கூறப்படுகிறது.