டெக்

கரூர்: உலகிலேயே மிகச்சிறிய சாட்டிலைட்டை வடிவமைத்த மாணவர்களுக்கு நாசா பாராட்டு!

கரூர்: உலகிலேயே மிகச்சிறிய சாட்டிலைட்டை வடிவமைத்த மாணவர்களுக்கு நாசா பாராட்டு!

kaleelrahman

கரூரில் 3 கல்லூரி மாணவர்கள் இணைந்து 64 கிராம் எடையுள்ள சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளனர். இது உலக அளவில் மிக சிறிய சேட்டிலைட்டாக நாசாவால் தேர்ந்துடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாசாவில் இருந்து விண்வெளிக்கு ஏவப்பட உள்ளது.

நாசா நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து 11 வயது முதல் 18 வயதுவரை உள்ள மாணவர்களுக்கான க்யூப் இன் ஸ்பேஸ் என்ற தலைப்பில் போட்டியை நடத்தி. வருகிறது. இந்த போட்டியில் கலந்த கொண்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர், அனுப்பிய 64 கிராம் எடைகொண்ட சாட்டிலைட் உலக அளவில் சிறிய சாட்டிலைட்டாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

இந்த சாட்டிலைட்டை வடிவமைத்த அட்னன், அருண் ஆகியோர் கரூர் தாந்தோணி மலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் படித்து வருகின்றனர். மற்றொரு மாணவர் கேசவ் கோவையில் பொறியியல் படித்து வருகிறார்.

இந்த மூன்று மாணவர்களும் சேர்ந்து தான் 64 கிராம் எடையுள்ள சேட்டிலைட்டை வடிவமைத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இந்த போட்டி பல்வேறு கட்டங்களைக் கடந்து அண்மையில் இவர்கள் 64 கிராம் எடையுள்ள சாட்டிலைட்டை உருவாக்கி அதை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விளக்கி காண்பித்தனர்.

இதையடுத்து இந்த 64 கிராம் சாட்டிலைட் முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. உலகிலேயே மிகச்சிறிய மிக லேசான செயற்கைக்கோள் என்ற தகுதியையும் இந்த சாட்டிலைட் பெற்றுள்ளது. இந்த சாட்டிலைட் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நாசாவிலிருந்து ராக்கெட் மூலம் விண்வெளிக்கு ஏவப்பட உள்ளது. 64 கிராம் எடையுள்ள இந்த சாட்டிலைட்டில் 13 சென்சார்கள் உள்ளன. அதன் மூலம் 20க்கும் மேற்பட்ட ஆய்வுகளுக்கான தரவுகளை விண்வெளியில் இருந்து கொண்டு வரமுடியும்.

மேலும் ராக்கெட்டில் உருவாகும் காஸ்மிக் கதிர்களின் தன்மை பற்றி இந்த சாட்டிலைட் மூலம் ஆராய்ச்சி செய்ய முடியும் என்றார். மாணவர் அடினன். சென்னையிலுள்ள ஸ்பேஸ் கிட் இந்தியா என்ற அமைப்பு கரூர் மாணவர்களின் 64 கிராம் எடையுள்ள சாட்டிலைட் வடிவமைப்புக்கு பெருமளவு உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மிகச் சிறிய சாட்டிலைட்டை மாணவர்கள் வடிவமைக்க இதுவரை 2 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இந்த தொகையை கரூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஸ்பான்சர் செய்துள்ளது.