டெக்

பீம் ஆப் உடன் அறிமுகமாகும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்ஃபோன்

பீம் ஆப் உடன் அறிமுகமாகும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்ஃபோன்

webteam

சீன மொபைல் நிறுவனமான கார்பன் (Karbonn), பீம் ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் 4ஜி ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

K9 Kavach 4G என்னும் இந்தப் புதிய மாடலில், இந்திய அரசின் பீம் (BHIM) ஆப்பை இன்ஸ்டால் செய்து அளிக்கிறது கார்பன் நிறுவனம். மேலும், பணப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாக மேற்கொள்வதற்காக, ஃபிங்கர் பிரின்ட் சென்ஸாரையும் இணைத்திருக்கிறார்கள். ஃபோன்புக்கில் இருக்கும் தொடர்புகளுக்கு மொபைல் எண் மூலமாக எளிதாக பணம் அனுப்பும் வசதி இந்த மொபைலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2300 mAh பேட்டரி, 1.25 Ghz ப்ராசஸர், 1ஜிபி ரேம், 5 இன்ச் டிஸ்ப்ளே, 5 மெகா பிக்ஸல் கேமரா, ஃபிங்கர் டச் சென்ஸார் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் ஷோரூம்களிலும், மொத்த விற்பனையாளர் கடைகளிலும் கிடைக்கும் இந்த மொபைலின் விலை ரூ.5,290.