டெக்

‘K10’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஒப்போ: விலை & சிறப்பம்சங்கள் என்ன?

‘K10’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஒப்போ: விலை & சிறப்பம்சங்கள் என்ன?

EllusamyKarthik

டிஜிட்டல் தொழில்நுட்ப உற்பத்தி நிறுவனமான ‘ஒப்போ’, இந்திய சந்தையில் தனது முதல் ‘K’ சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே ‘K10’ போனின் டீசர்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக அந்த போனை இப்போது லான்ச் செய்துள்ளது ஒப்போ. K9 போனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த போன் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை?

பட்ஜெட் கேட்டகிரியில் இந்த போன் வெளியாகியுள்ளது. 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 புராஸசர், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், பின்பக்கத்தில் மூன்று கேமரா, 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இந்த போனில் இடம் பெற்றுள்ளது. 5000mAh திறன் கொண்ட பேட்டரி. டைப் சி சார்ஜிங் போர்ட். டியூயல் சிம் கார்டுகளை போட்டு, பயன்படுத்தும் வசதி மாதிரியானவை இதில் உள்ளது. 

6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது. இந்த போன் கருப்பு மற்றும் நீல நிற வண்ணத்தில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். வரும் 29-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த போனை அறிமுக சலுகை விலையில் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14,990 மற்றும் 16,900 ரூபாய் என இரண்டு வேரியண்டுகளையும் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது இந்த போன்.