ஜேம்ஸ் வெப் PT
டெக்

ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியின் கண்டுபிடிப்பு; புதியதாக உருவாகிக்கொண்டிருக்கும் சூரிய குடும்பம்!

ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியின் கண்டுபிடிப்பு; புதியதாக உருவாகிக்கொண்டிருக்கும் சூரிய குடும்பம்; புரோட்டோஸ்டார் பெயரில் ஒரு புதிய நட்சத்திரம் உருவானது

Jayashree A

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

இந்த பிரபஞ்சத்தில் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்திருக்கும்? சூரியன் எப்படி உருவாகி இருக்கும்? பூமியில் உயிர்கள் எப்படி தோன்றிருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வதற்காக விஞ்ஞானிகள் பலஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதல் படியாக ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை பிரஞ்சு கயானாவிலிருந்து அமெரிக்கா விண்ணிற்கு ஏவியது. இதற்கு காரணம் விண்வெளியில் இருந்து நட்சத்திரங்களை ஆய்வு செய்வது சுலபம், மேலும் பல அரிய தகவல்களை தெரிந்துக்கொள்ளமுடியும் என்பதால் விஞ்ஞானிகள் இத்தகைய ஆராய்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரஞ்சு கயானாவில் உள்ள கோவரு என்ற விண்வெளி நிலையத்திருந்து அரியேன் செயற்கைக்கோள் ஏவல் நிறுவனத்தின் ராக்கெட் ஒன்றின் மூலமாக ஜேம்ஸ் வெப்பை நாசா விண்வெளிக்கு அனுப்பியது. நாசாவுடன் இணைந்து ஐரோப்பிய விண்வெளி அமைப்பான ஈ எஸ் ஏ வும் களத்தில் இறங்கியுள்ளது.

இதன் மூலம் சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களின் வளிமண்டலங்களை ஆய்வு செய்ய முடியும் என நம்புகிறார்கள். இந்த ஜேம்ஸ் வெப் அங்கு சென்றதும் நமக்கு சில தகவல்களை நமக்கு அளித்துள்ளது.

விண்வெளியை ஆய்வு செய்த ஜேம்ஸ் வெப் ஒரு புதிய நட்சத்திரம் உருவாவதை படம் பிடித்து அனுப்பி உள்ளது. புதிதாக உருவான அந்த நட்சத்திரத்தின் பெயர் புரோட்டோ ஸ்டார்.

இது ஒரு இளம் அதாவது புதிதாக பிறந்த நட்சத்திரம். இது ஆரம்பத்தில் தனது ஒளியை மிகவும் குறைத்து ஒளிர்ந்துக் கொண்டிருக்கும். பிறகு நாளடைவில் பெரிதாகி சூரியனைப்போல் பிரகாசிக்கும். அதன் பிறகு இதில் உள்ள எரிபொருட்கள் தீர்ந்ததும் தனது ஒளியை இழந்து வெள்ளைக்குள்ளன் அல்லது வெடித்து புதிய நட்சத்திரம் உருவாவதற்கு வழிவகுக்கும்.

புரோட்டோஸ்டார் எப்படி பெரியதாக உருமாறும்? இது குறித்து நமக்கு விளக்குகிறார், Dr.விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி, Postdoctoral researcher, Trottier Space Institute at McGill, Montreal Canada

புதிதாக பிறந்த புரோட்டோஸ்டார் மீது பல பொருட்கள் அதாவது, அருகில் இருக்கும் விண்கற்கள் அண்டத்தில் நிலைக்கொண்டிருக்கும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்றவை இதன் மீது மோதுவதால், அதன் அதிர்வில் புரோட்டோஸ்டாரிலிருந்து இரு பக்கங்களிலும் ஜெட் வேகத்தில் ஷாக் வெளியேறும்."

(படம்: இந்த ஷாக் தான் கருப்பு கலரில் தோற்றத்தை கொடுத்துள்ளது ) "இதிலிருந்து பலவண்ணங்கள் தோன்றுகிறது அது லைட் புளூவிலிருந்து சிவப்பு வரை நம் கண்களுக்கு புலப்படும். தவிர நம் கண்களுக்கு புலப்படாத இன்ப்ரா ரெட் லைட் , அல்ட்ரா வைலட் கதிர்கள் ரேடியோவேவ் போன்ற பல கதிர்களை இந்த புரோட்டோஸ்டார் வெளியேற்றுகிறது. இந்தவகை இன்ப்ரா ரெட்லைட்டையும் கண்டுபிடிக்க ஜேம்ஸ்வெப்பினால் முடியும். ஆகவே புரோட்டோஸ்டாரிலிருந்து வெளியேறும் இன்ப்ராரெட் லைட்டைக்கொண்டு புதிதாக பிறந்த நட்சத்திரங்களை ஜேம்ஸ்வெப்பானது தனது ஆராய்ச்சியின் முக்கிய அம்சமாகக் கொண்டு ஆராய்ந்து வருகிறது." என்கிறார்

Dr.விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி,

இப்படி புதிதாக தோன்றிய சூரிய குடும்பத்தை சுற்றி இருக்கும் கோள்கள் மற்றும் நட்சத்திரங்களை ஜேம்ஸ்வெப் போன்ற தொலைநோக்கி வாயிலாக மாணவர்கள் படித்து வருகின்றனர்.