டெக்

வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது ஜிசாட்-31 செயற்கைக்கோள் !

வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது ஜிசாட்-31 செயற்கைக்கோள் !

webteam

இந்தியாவின் ஜிசாட்-31 செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு வசதிகளைப் பெருக்கும் வகையில், நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில், தகவல் தொடர்புக்காக ஜிசாட் 31 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியது. இந்தச் செயற்கைக்கோள் ஐரோப்பிய ராக்கெட்டான ஏரியன் 5 மூலம் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக ஜிசாட் 31 செயற்கைக்கோள் கொரூவ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

அதன்படி பிரெஞ்சு கயா‌னாவிலிருந்து இந்திய நேரப்படி அதிகாலை 2:31 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட இந்த ஜிசாட்-31 செயற்கைக் கோள்‌ இந்தியாவின் 40 ஆவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோளாகும். ஏரியன்ஸ்பேசஸ் ராக்கெட் மூலம் ஜிசாட்-31 செயற்கைக்கோள் விண்ணில் ஏ‌வப்பட்டது. இந்த செயற்கைக்‌கோள் இந்தியா மற்றும் சுற்றியுள்ள தீவுகளின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

15 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்டுள்ள இந்த செயற்கை கோள் ,ஏற்கெனவே உள்ள VSAT நெட்வொர்க்கிற்கு உறுதுணையாக செயல்பட உள்‌ளது.  தொலைக்காட்சி பதிவேற்றம்,டிஜிட்டல் செய்தி ஒருங்கிணைப்பு போன்ற பயன்பாட்டிற்கு இந்த செயற்கைக்கோள் ‌உதவுகிறது.‌மேலும் அரபிக்கடல், இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா போன்ற கடல்பகுதியில் தொலைத்தொடர்பை உறுதிப்படுத்தவும் பயன்படுகி‌றது.