உலகில் விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி செய்யும் இடங்களை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு திருப்பியுள்ளது. இந்தியாவில் அசெம்ப்ளி தொழிற்சாலைகள் இருந்தாலும் உற்பத்தி தொழிற்சாலைகளையும் கட்டமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க மொபைல் போன்களை அதிகளவில் உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அனைத்து நிறுவனங்கள் செல்போன்களை உபயோகிப்பது தொடர்பான புத்தகங்களையும் அளிக்கின்றன.
இந்நிலையில் ஆப்பிள் ஐபோன்களைப் பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் சில எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஐபோன்களை சார்ஜரில் போட்டுவிட்டு தூங்கச் செல்லக்கூடாது, தலையணை அல்லது போர்வைக்கு அருகில் போனை வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
போனை சார்ஜ் செய்யும் போது அதிகவெப்பம் வெளியேறும் என்பதால் எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது. வீட்டில் காற்றோட்டமாக உள்ள இடத்தில் சார்ஜ் போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. உயிர்மதிப்பில் உள்ள ஆப்பிள் ஐபோன்கள் மட்டுமல்ல எந்த பிராண்டுகளைச் சேர்ந்த ஸ்மார்ட் போன்கள் என்றாலும் இந்த விதிமுறைகளைப் பின்பாற்றினால் தேவையற்ற ஆபத்துகளைத் தவிர்க்கலாம்.