டெக்

மிரட்ட வரும் ஐஃபோன் 8: அப்படி என்ன இருக்கு?

webteam

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 8 மாடல் மொபைல் பிரியர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. பெரிய திரையுடன் வரவிருக்கும் இந்த மொபைல் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐஃபோன் 8 செப்டம்பர் 12 ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிளின் தலைமை அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மொபைல் பிரியர்களிடையே பெரிதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐஃபோன் 8-ல் கூடுதலாக 512 ஜிபி மெமரி நீட்டிக்கப்பட்டது இதனுடைய முக்கிய சிறப்பம்சமாகும்.

இத்துடன் இந்த மாடலில் ஒஎல்இடி டிஸ்பிளே கொண்டு, 3டி அம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. OLED பேனல்களை கொண்டிருக்கும் ஐஃபோன் 8, டச் ஐடி கைரேகை அம்சத்திற்கு மாற்றாக புதிய 3D ஃபேஷியல் ரெக்கஃனீஷேஷன் வசதியுடன் வெளிவரவுள்ளது மற்றும் ஹோம் பட்டனிற்கு மாற்றாக ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

டூயல் பிரைமரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் சிறப்பான வாட்டர் ப்ரூஃப் வசதி போன்ற பல அம்சங்களுடன் மிரட்டவருகிறது ஐஃபோன் 8. மேலும் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது. இதன் விலை 1000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.64,035) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.