டெக்

இன்ஸ்டாகிராமில் வாய்ஸ் மெசேஜ் அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் வாய்ஸ் மெசேஜ் அறிமுகம்

webteam

வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் முறையை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் என்பது இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினர்களிடமும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா ஆகியவை முக்கிய இடங்களில் உள்ளன. சமூக வலைத்தளங்களின் ராஜாவாக கருதப்படும் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டா ஆகியற்றையும் நிர்வகித்து வருகிறது. 

சமூக வலைத்தளங்களின் போட்டிகளை சமாளிக்கவும், பயன்பாட்டாளர்களை என்றுமே புத்துணர்ச்சியோடு வைத்திருக்கவும் புதுப்புது அப்டேட்டுகளை நிறுவனங்கள் கண்டுபிடித்து நடைமுறைக்கு கொண்டு வருகின்றன. நாளுக்கு நாள் புதுப்புது அப்டேட்டுகளுடன் இன்ஸ்டாகிராம் அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

பிரபலங்கள் பலரும் மற்ற சமூக வலைத்தளங்களைக் காட்டிலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆவாக இருக்கிறார்கள். தங்களது தினந்தோறும் நடவடிக்கைகளை இன்ஸ்டாவில் பதிவு செய்து தங்களை பின்பற்றுபவர்களிடம் இணைந்தே இருக்கின்றனர்.

இந்நிலையில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் முறையை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. இதுவரையில் இன்ஸ்டாகிராமில் டெக்ஸ்ட் மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை மட்டுமே அனுப்பும் வசதி இருந்தது. அது தற்போது அப்டேட் செய்யப்பட்டு வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி இன்ஸ்டா சேட் பாக்சில் உள்ள மைக் மாதிரியான பொத்தானை அழுத்தி பிடித்து வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம். அது உடனடியாக அனுப்பப்படும். ஒருவேளை அந்த வாய்ஸ் மேசேஜை டெலிட் (Delete) செய்ய வேண்டுமென்றால் ஆடியோவை அழுத்தி பிடித்து வலதுபுறமாக தள்ளி டெலிட் ஆப்சனில் கொண்டு சென்று டெலிட் செய்யலாம். அல்லது தவறுதலாக அனுப்பப்பட்டால் ஆடியோவை அழுத்து பிடித்து அன் செண்ட் (unsend) ஆப்சன் மூலம் மெசேஜ் செல்வதை தடுக்கலாம். 

இந்த முறை பேஸ்புக், வாட்ஸ் அப்களில் உள்ளது போலவே இருப்பதால் பயனாளர்களிடம் எளிதில் சென்றடையும் என்றும், இது இன்ஸ்டா பயனாளர்களை மேலும் அதிகரிக்க உதவும் என்றும் சமூக பயன்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்