ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் நிறுவனமான இன்ஃபினிக்ஸ், இந்தியாவில் லேப்டாப் விற்பனையில் களமிறங்குகிறது. அதை உறுதி செய்யும் வகையில் இன்ஃபினிக்ஸ் இன்புக் X1 என்ற லேப்டாப்பின் அறிமுகத்தை கண்ணோட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.
இன்டல் கோர் புரோசஸர் உடன் இந்த லேப்டாப் விற்பனைக்கு வருகிறது. கோர் i3, கோர் i5, கோர் i7 என்ற மூன்று புரோசஸர் வேரியண்ட்களில் இந்த லேப்டாப் கிடைக்கும் என இன்ஃபினிக்ஸ் தெரிவித்துள்ளது.
விண்டோஸ் 11 இயங்குதளத்தில் இயங்கும் இந்த லேப்டாப் ‘Thinnest and Lightest’ பிரிவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 1.48 கிலோகிராம். 16.33 மில்லி மீட்டர் மட்டுமே தடிமன் கொண்டுள்ளது இந்த லேப்டாப். 55Whr பேட்டரி திறன் கொண்டுள்ளது இந்த லேப்டாப். மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த லேப்டாப் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது லேப்டாப் ஆகும்.
இதற்கு முன்னதாக இன்புக் X1 புரோ என்ற லேப்டாப் சாதனத்தை இன்ஃபினிக்ஸ் விற்பனை செய்திருந்தது.