டெக்

விண்வெளி செல்லும் 3 வது இந்தியா வம்சாவளிப் பெண்..

webteam

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஷாவ்னா பாண்டியா என்ற பெண் விண்வெளிக்குச் செல்ல இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

வரும் 2018- ஆம் ஆண்டில் நடைபெற உள்ள இந்த விண்வெளி பயணத் திட்டத்தின் கீழ் பங்கேற்கவுள்ள நபர்களை நாசா அண்மையில் வெளியிட்டது. அதில், இந்திய வம்சாவழியை சேர்ந்த ஷாவ்னா பாண்டியாவும் இடம்பெற்றுள்ளார். இதனால் விண்வெளி செல்லும் மூன்றாவது இந்திய வம்சாவழி பெண் என்ற பெருமையும் ஷாவ்னாவை சேரும்.

கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை தொடர்ந்து ஷாவ்னா பாண்டியா விண்வெளி செல்லவிருக்கிறார்.

நன்கு பயிற்சி பெற்ற விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள நபர்களை மட்டுமே, விண்வெளிக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் ஷாவ்னா ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இதற்காக சிறப்பு பயிற்சியை நாசா மையத்தில் ஷாவ்னா பாண்டியா மேற்கொண்டு வருகிறார்.