டெக்

5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்

5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்

webteam

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்து தனது ஆய்வு பயணத்தை தொடங்கியது. 

இந்த திட்டத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் ஒரே முயற்சியில் நுழைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. கடந்த 5 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் சூறாவளி உள்ளிட்ட நிகழ்வுகளை மங்கல்யான் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பிவருகிறது.