டெக்

உலகளவில் டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளில் இந்தியா முதலிடம்: ஆய்வறிக்கை

Veeramani

2020-ஆம் ஆண்டில் நடந்த டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளின் மொத்த எண்ணிக்கையில் சீனா, தென் கொரியா, தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை முந்தி இந்தியா முதலிடத்தில் இருப்பதாக புதிய ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு, நடந்த ஒட்டுமொத்த பரிவர்த்தனைகளிலும், உடனடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 15.6% ஆக இருந்தன. மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் 22.9 சதவீதமாக இருந்தன என ஏசிஐ வேர்ல்டுவைட் அறிக்கை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகள், 2025 ஆம் ஆண்டில் 71.7% ஆக உயரும் என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது.