டெக்

ஃபேஸ்புக் அடிமைகள் இந்தியாவில்தான் அதிகமாம்...

ஃபேஸ்புக் அடிமைகள் இந்தியாவில்தான் அதிகமாம்...

webteam

வயது வித்தியாசமின்றி அனைவரையும் தன் வசம் ஈர்த்துள்ள ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில்தான் மிக அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன. 

ஹூட்சூட் சமூக வலைத்தள ஆய்வு நிறுவனம் ஃபேஸ்புக் பயனாளர்கள் எண்ணிக்கையை நாடுகள் வாரியாக வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவில் 24.1 கோடி பயனாளர்கள் ஃபேஸ்புக் கணக்கு வைத்திருக்கிறார்கள். அடுத்த இடத்தில் இருப்பது அமெரிக்கா. அமெரிக்கர்கள் பெயரில் 24 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் உள்ளன. இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா இப்போது அமெரிக்காவை முந்தியுள்ளது. இதையடுத்து, பிரேசில், இந்தோனேஷியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் புதிய ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்குவது 27 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் ஆய்வில் கண்டறியபட்டுள்ளது. மேலும் இந்திய மக்கள்தொகையில் மொத்தம் 20 சதவீதம் பேர் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அவர்களில் பாதி பேர் 25 வயதுக்குட்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.