நவீனகால வழக்குமுறையில் சூப்பர் மால், சூப்பர் மார்க்கெட் தொடங்கி பெட்டிக்கடை, இளநீர் கடை வரை UPI பணப்பரிவர்த்தனை வந்துவிட்டது. எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், பெரும்பாலான மக்கள் தங்கள் பாக்கெட்டுகளில் பணம் வைத்திருப்பதை உறுதிசெய்வதில்லை. அதான் மொபைலில் யுபிஐ ஆப்களில் பணம் இருக்கிறதே என்ற எண்ணத்தில் யுபிஐ-ன் கைகளில் தங்களது சிறிய சிறிய பணப்பரிவர்த்தனையை கூட ஒப்படைத்துவிட்டனர்.
இன்னும் சில மக்கள் யுபிஐ ஆப்களான “ Paytm, GPay மற்றும் PhonePe" மூன்றுவிதமான யுபிஐ ஐடிகளையும் உருவாக்கி வைத்துக்கொண்டு மூன்றிலிருந்தும் பணப்பரிவர்த்தனை செய்கின்றனர். அப்படி செய்யும்போது சில நேரங்களில் தவறுதலாக தொடர்பாளரின் ஐடி எல்லா ஆப்களிலும் இருப்பதில்லை, அவ்வாறான நேரங்களில் சிலர் தவறுதலாக வேறுஒருவருக்கு கூட பணத்தை அனுப்பிவிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.
அப்படி வேறு யாருக்காவது தவறுதலாக யுபிஐ மூலம் பணம் அனுப்பிவிட்டு எப்படி திரும்பிபெறுவது என்ற பெரிய குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். சிலர் மிகுந்த மனவேதனையையும் அடைந்துவிடுகிறார்கள். அப்படி தவறுதலாக யுபிஐ மூலம் பணம் அனுப்பிவிட்டால் எப்படி திரும்ப பெறுவது என்ற வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
நான்குவிதமான வழிகளில் நீங்கள் உங்களுடைய பணத்தை திரும்ப பெறலாம்..
1. UPI மூலம் வேறு ஒருவருக்கு தவறாக பணம் அனுப்பிவிட்டால், Paytm (அ) GPay சாட் மூலம் அவரை தொடர்பு கொண்டு பணத்தை பெறலாம்.
2. அல்லது UPI வாடிக்கையாளர் மையத்தை தொடர்புகொண்டு 24-48 மணி நேரத்தில் பணத்தை திரும்ப பெறலாம்.
3. அதில் தீர்வு ஏற்படாவிட்டால், அருகிலுள்ள வங்கி கிளையை தொடர்புகொண்டு 45 நாள்களில் பணத்தை திரும்ப பெறலாம்.
4. அப்போதும் பணம் கிடைக்காவிட்டால் NPCI தளத்தில் புகார் அளிப்பதன் பேரில் பணத்தை திரும்ப பெறலாம்.