இணையத்தளத்தில் எதற்குமே பாதுகாப்பு என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இதில் பயனர்களுக்கு ரிஸ்க் என்பது ரொம்பவே அதிகம் என சொல்லப்படுகிறது. இணையத்தின் இயக்கமின்றி உலகத்தின் இயக்கமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு நாளும் பலரது தனிப்பட்ட தரவுகள் கசிவது குறித்த செய்திகள் வருகின்றன. பிரைவசி அச்சுறுத்தல் என்பது இப்போது வழக்கமாகிவிட்டது.
இருந்தாலும் ஆன்லைன் பாதுகாப்புக்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதில் முதலாவதாக ஒவ்வொரு இணையதள பயனர்களும் தங்களது பிரவுசர்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டுமென சொல்லப்படுகிறது. அதாவது பெரும்பாலான வெப் பிரவுசர்கள் நீண்ட நாட்களாக செக் செய்யப்படாத தகவல்களை ஹோல்ட் செய்து வைக்கின்றன. அதனால் லாக்-இன் சிக்கல் மற்றும் வேறு சில தளங்களை அக்செஸ் செய்வதில் சிக்கல் உருவாகலாம் என சொல்லப்படுகிறது.
உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் பிரவுசர்களில் ஒன்று கூகுள். அந்த பிரவுசரில் பயனர்கள் தேடும் அனைத்தும் அதன் சர்வரில் சேமிக்கப்படுவதாக தகவல். பயனர்கள் தேடுகின்ற தரவுகளின் அடிப்படையில் கூகுள் விளம்பரம் கூட செய்து வருகிறது. மேலும் அந்த தரவுகளை மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறித்த புகார்களும் எழுகின்றன.
அதனால் அவ்வப்போது அதனை டெலீட் செய்வது அவசியம் என சொல்லப்படுகிறது. அதாவது சர்ச் ஹிஸ்டரி (Search History), கேச் (Cache) ஹிஸ்டரி மற்றும் குக்கீகளை கிளியர் செய்வதும் அவசியம் என சொல்லப்படுகிறது.
கூகுளில் சர்ச் ஹிஸ்டரியை டெலீட் செய்வது எப்படி?
ஐபோன் பயனர்கள்!
>கூகுள் மை ஆக்ட்டிவிட்டிக்கு பயனர்கள் செல்ல வேண்டும்.
>அதில் பயனர்களின் அனைத்து ஹிஸ்டரி விவர்களும் இருக்கும். அதில் டெலீட் ஆக்ட்டிவிட்டி என இருக்கும். அதை டேப் செய்ய வேண்டும்.
>பின்னர் ‘ஆல் டைம்’ என்பதை டேப் செய்ய வேண்டும்.
>பின்னர் ‘நெக்ஸ்ட்’ என்பதை தேர்வு செய்து டெலீட் கொடுத்தால் அனைத்து சர்ச் ஹிஸ்டரியும் டெலீட் ஆகி விடும். ஆட்டோ மெட்டிக் டெலீட் ஆப்ஷனும் உள்ளன.
ஆண்ட்ராய்டு பயனர்கள்!
>குரோம் அப்ளிகேஷனை ஓபன் செய்ய வேண்டும்.
>அதில் வலது புறம் மேல் இருக்கும் மூன்று டாட்களை (Vertical Dots) கிளிக் செய்ய வேண்டும்.
>அதில் ஹிஸ்டரியை தேர்வு செய்யவும்.
>பின்னர் க்ளியர் (Clear) பிரவுசிங் டேட்டாவை தேர்வு செய்யவும்.
>பேஸிக் மற்றும் அட்வான்ஸ்டு என இரண்டு டேப் இருக்கும். அதில் கடந்த ஒரு மணி நேரம், 24 மணி நேரம், கடந்த 7 நாட்கள், கடந்த 4 வாரம், ஆல் டைம் என ஆப்ஷன் இருக்கும்.
>அதில் பயனர்கள் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து ‘க்ளியர் டேட்டா’-வை டேப் செய்தால் அனைத்தும் டெலீட் ஆகி விடும்.
கணினி பயனர்கள்!
>ஜிமெயில் சேவையில் ‘மேனேஜ் யுவர் அக்கவுண்ட்’ அல்லது குரோம் பிரவுசரில் வலது புறம் மேல் இருக்கும் மூன்று டாட்களை கிளிக் செய்யவும்.
>அதில் ஹிஸ்டரியை தேர்வு செய்யவும்.
>‘க்ளியர் பிரவுசிங் டேட்டா’ மூலம் அனைத்தையும் டெலீட் செய்யலாம்.