டெக்

80 ஆயிரம் ரூபாய்க்கு வருகிறது ஹோண்டா எக்ஸ்-ப்ளேட்

webteam

ஹோண்டா நிறுவனத்தின் புதிய மாடல் பைக் ஆன எக்ஸ்-ப்ளேட் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவின் முன்னணி பைக் நிறுவனங்களில் ஹோண்டாவும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் யூனிகார்ன் (150 சிசி), ஷைன், டியோ உள்ளிட்ட பல பைக்குகள் வாடிக்கையாளர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஹோண்டா நிறுவனம் எந்த ஒரு புதிய மாடல் பைக்கை வெளியிட்டாலும், குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்னரே வாடிக்கையாளர்கள் புக் செய்ய வேண்டும் என அறிவிப்பது, அதன் வியாபார தந்திரம் என்று கூறலாம். அதன்படி மார்ச் மாதம் வெளியாகும் ஹோண்டா எக்ஸ்- ப்ளேட் மாடலுக்கு தற்போது புக்கிங் தொடங்கிவிட்டது.

இதன் விலை ரூ.80,000 ஆகும். மாநிலங்களின் அடிப்படையில் இது மாறுபடும். இது 160 சிசி இன்ஜியனுடன் வெளிவருகிறது. யூனிகார்ன் 160 சிசி மாடல் பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறாததையடுத்து, இந்தப் புதிய மாடலை அந்நிறுவனம் வெளியிடுகிறது.

சிறப்பம்சங்கள்:

இன்ஜியன் : 162.71 சிசி, 4 ஸ்டோக், சிங்கிள் சிலிண்டர் 

மைலேஜ் அளவு : வெளியிடப்படவில்லை

கியர்ஸ் : 5

வீல்ஸ் : முன், பின் ஆலாய் வீல்ஸ்

டயர் டைப் : ட்யூப்லெஸ்

ஹெட் லைட் : எல்இடி

ப்ரேக் : முன்புறம் டிஸ்க், பின்புறம் ட்ரம்

எடை : 140 கிலோ

பெட்ரோல் டேங்க் கொள்ளளவு : 12 லிட்டர்