Hero Splendor Bike web
டெக்

Hero Splendor Plus Xtec புதிய அப்டேட்டாக ஃப்ரண்ட் டிஸ்க் பிரேக்குடன்.. விலை இவ்வளவு தானா?!

Rishan Vengai

25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சந்தையில் விற்பனையில் இருந்துவரும் Splendor பைக்கானது, இதுவரை இரண்டு முனைகளிலும் டிரம் பிரேக்குகளுடன் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், Hero MotoCorp இப்போது Splendor Plus XTEC பைக்கை புதிய அப்டேட்டட் வெர்சனாக முன் டிஸ்க் பிரேக்குடன் வழங்குவதை உறுதிசெய்துள்ளது. இந்திய சந்தையில் ஹீரோவின் அதிகம் விற்பனையாகும் பைக்காக இருந்துவரும் ஸ்பிளெண்டர், தற்போது புதிய மெக்கானிக்கல் அப்டேசனாக முன்பக்க டிஸ்க் பிரேக்குடன் ரூ.83,461 விலையில் கிடைப்பதை அந்நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

எப்போதும் வடிவமைப்பை மாற்றாத ஸ்பிளெண்டர்..

ஸ்பிளெண்டர் பைக்கானது இந்திய சந்தையில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே இதுவரை எந்தவிதமான மாறுதல்களும் இல்லாமல், அதே வடிவமைப்பை மட்டுமே கூடக்குறைய தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இருப்பினும், இது பல ஆண்டுகளாக புதுப்புது அப்டேசன்களை கொண்டுவரும் முயற்சியை தொடர்ச்சியாக எடுத்துவருகிறது. தற்போதைய பதிப்பின் படி முன்பக்க டிஸ்க் பிரேக்குடன் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், புளூடூத் இணைப்பு, அலாய் வீல்கள் மற்றும் i3s ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களுடன் வழங்கப்படுகிறது.

இந்த குறிப்பிட்ட மாறுபாட்டிற்கான வண்ண விருப்பங்களாக கருப்பு பிரகாசிக்கும் நீலம், கருப்பு டொர்னாடோ சாம்பல், சிவப்பு கருப்பு முதலிய நிறங்களை கொண்டுள்ளது.

மேலும், Splendor தொடர்ந்து 97.2 cc ஏர்-கூல்டு எஞ்சின் மூலம் 8 bhp மற்றும் 8.05 Nm பீக் டார்க்கை வெளிப்படுத்தும். 4-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த மோட்டார்சைக்கிள் 70 கிமீ லிட்டருக்கும் அதிகமான எரிபொருள் செயல்திறனைக் கொண்டுள்ளது. புதிய அம்சமாக முன்பகுதியில் இப்போது டிஸ்க் பிரேக் இருந்தாலும், பின்புறம் டிரம் பிரேக்கையும் கொண்டுள்ளது.