ஹீரோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள HF 100 பைக்கின் சிறப்பம்சங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
ஹீரோ நிறுவனம் இந்தியாவில் HF 100 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. HF டீலக்ஸ் வரிசையில் HF 100 பைக் அறிமுகமாகியுள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் அறிமுகமாகியுள்ள HF 100, பஜாஜ் நிறுவனத்தின் CT100 பைக்குக்கு போட்டியாக களம் இறக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன் விலை 44,890 (எக்ஸ் ஷோரும் )
97.2cc சிலிண்டர் என்ஜினை கொண்ட HF 100 பைக் 4 ஸ்பீடு கியர் பாக்ஸை உள்ளடக்கியது. 110 கிலோ எடையுள்ள இந்த பைக்கின் முன் சக்கரத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் அமைப்பும் பின்சக்கரத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சர்பர் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி முன் மற்றும் பின் சக்கரங்களில் 130 mm ட்ரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
(check -The motorcycle is suspended on telescopic forks up front and hydraulic shock absorbers at the rear)
இதில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ் சென்ஸ் சென்சார் அமைப்புகளில் பொருத்தபட்டுள்ள சென்சார்கள் எல்லாவித சூழ்நிலைகளிலும் வாகனத்தை இயக்க வழிவகை செய்கிறது.
மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள i3 டெக்னாலாஜி ஸ்டார்ட் அண்ட் ஸ்டாப் சிஸ்டம், பெட்ரோலை மிச்சப்படுத்த உதவுகிறது.